/உள்ளூர் செய்திகள்/கடலூர்/"டாடா ஏஸ்' வாகனம் பாலத்தில் மோதி விபத்து: இருவர் பலி"டாடா ஏஸ்' வாகனம் பாலத்தில் மோதி விபத்து: இருவர் பலி
"டாடா ஏஸ்' வாகனம் பாலத்தில் மோதி விபத்து: இருவர் பலி
"டாடா ஏஸ்' வாகனம் பாலத்தில் மோதி விபத்து: இருவர் பலி
"டாடா ஏஸ்' வாகனம் பாலத்தில் மோதி விபத்து: இருவர் பலி
ADDED : ஜூன் 03, 2010 01:36 AM
கடலூர் : ராமநத்தம் அருகே பாலத்தில் மோதி "டாடா ஏஸ்' வாகனம் கவிழ்ந்ததில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரண்டு பேர் இறந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமகுடியை அடுத்த அண்டக்குடியைச் சேர்ந்தவர் மூக்கையா (49). இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று சென் னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி "டாடா ஏஸ்' வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். வண் டியை காவனூரைச் சேர்ந்த டிரைவர் ஆனந்தன் (22) ஓட்டிச் சென்றார். ராமநத்தம் அடுத்த வெங்கனூர் பாலம் அருகே செல்லும் போது "டாடா ஏஸ்' டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து பாலத்தின் கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதில் மூக்கையா, வெங்கனூரைச் சேர்ந்த மாயழகு (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் நிலையாண்டி செல் லூரைச் சேர்ந்த பழனிமுருகன், மூக்கையா மனைவி வள்ளி (40) ஆகியோர் படுகாயமடைந்தனர்.